காதல் கவிதைகள் வரிகள்
???????
என் வரிகளில் உள்ள
வார்த்தைகளுக்கும்
உணர்வுண்டென
உணர்ந்தேன்
நீ துடித்தபோது
சற்றுநேரம்
அனுமதி கொடு
நம் இதயங்கள்
சேர்ந்து கட்டிய
காதல் மாளிகையை
விடவா
இது அழகென்று
பார்த்து விடுகிறேன்
சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்
ஊடலின்
விரிசலை
காதலில்
நெய்கிறாய்
இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்
உன் நினைவொளியில்
வாழ்வேன்
நானும் அழகிய
உலகில் உன்னோடு
மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்
விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
பற்றிய
கரங்களுடனேயே
என் கடைசி
பயணம் வரை
ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே
நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால்
என் காதலின்
கருவறையும் நீ
கல்லறையும் நீ
நீள வேண்டும்
இவ் இரவு
நீல வானமாய்
அன்பே
நினைவை தூவுகிறாய்
நிஜமாய் உணர்கிறேன்
நீ உடனிருப்பதாய்
உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே
வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்
உனை
பின் தொடரவோ
நான்
நடைபழகியது
ஓய்வென்பதே
கிடையாது
உனை நேசிப்பதில்
மட்டும்
என் மனதுக்கு
அன்பே
காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்
சுமந்தே கடக்கின்றான்
என் மன
சுமைகளையும்
சலிக்காமல்
புன்னகையோடு
காத்திருந்த செவிகளுக்கு
விருந்தளித்தது அன்பே
என்ற உன் குரல்
உன் கண்ணாடி நான்
என் பிம்பம் நீ
ஆயுள் ரேகையை
பற்றி கவலையில்லை
உன் கை ரேகையோடு
இணைந்திருப்பதால்
நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும்
மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே
விலகலில் இல்லை
வாழ்க்கை
உன் விழிகளில்
என்றுணர்ந்தேன்
என்னவனே
என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்
நீ கிறுக்கிய வரிகள்
என்னை கிறுக்காக்கி
கொண்டிருக்கு அன்பே
நீரின்றி
உலகுமில்லை
நீயில்லையெனில்
எனக்குலகமும் இல்லை
உயிரே
உன்னை
வாசித்ததைவிட
உன்னில் சுவாசித்ததே
அதிகம் நான்
நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க
நீ விழிகளில்
கவிதை எழுத
என் விழிகளுக்கு
மையிடுகிறேன்
மையலோடு
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென
மௌனமும்
பேசுமென்று
உணர்ந்தேன்
உன்னருகில்
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று
எனக்கு
பிடித்ததைவிட
உனக்கு
பிடித்தவைகளையே
மனமும் விரும்பி
ரசிக்கின்றது
மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்
சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்
கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்
கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன்
உன் நினைவுகளாய்
நான் வாழ விரும்பவில்லை
உனக்கு நினைவு
இருக்கும் வரை
உன்னில் வாழ விரும்புகிறேன்
அத்தனை கோபங்களையும்
சட்டென
கரைத்து விடுகிறாய்
உன் குறும்புகளில்
ஆரவாரமில்லா
உன் காதலில்
ஆழமாய்
நானும் மூழ்கித்தான்
போகிறேன்
அழகாய்
நமக்கான உலகுக்குள்
எப்படி எழுதினாலும்
ரசிக்கின்றாய்
இதழ்வரி கவிதையை
சிரிப்பை சிதறவிடாதே
சிக்கி தவிக்குது
நாணமும்
உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து (கவுத)
தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
மனம் உன்னிடத்தில்
ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு
நீ என்னவன் என்பதில்
எப்போதும் எனக்கு
திமிர் அதிகம் தான்
யாருமற்ற சாலையில்
உடன் பயணிக்கிறது
உன் நினைவுகள்
மட்டும் பேரிறைச்சலுடன்
உதிர்ந்த சருகும்
உயிர் பெற்றது
உன் பார்வை
தீண்ட
தொலைவில்
நீயிருந்தாலும்
உனை கையிலேந்தி
ரசிப்பேன் காதலுடன்
நிலவுப் பெண்ணே
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
கடினம் தான்
ஆனாலும் சுகம்
நீ வருவாய்
என்ற நினைப்பே
காத்திருப்பில்
சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென
ஒவ்வொரு முறையும்
பிரியங்களை அதிகமாக
அள்ளித் தெளித்தபடியே
செல்கிறது உன் பிரிவு
அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு
பக்கத்தில் நீயில்லாத
போதும்
வெட்கத்தில் தடுமாறுது
வார்த்தைகளும்
எங்கிருந்தோ
உன் குரல் அழைக்க
ஊடலும் கரைந்தது
நீ அன்பால்
கலந்துதந்த
ஒரு கப் காப்பியில்
போகாதே என்ற
கெஞ்சலுக்காகவே
மிஞ்ச தோணுது
உன் வார்த்தையை
அருகில் இல்லாமலேயே
எனை இம்சிக்க
உன் அன்பினால்
மட்டுமே முடியும்
எனதன்பே
கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்
கட்டுப்பாடு விதிக்கா
உன் நேசத்தில்
கட்டுண்டு கிடக்கும்
என் காதலும்
காலமெல்லாம் என்னன்பே
மெல்லிசையிலும்
மெ(இ)ன்னிசை
உன் நினைவு
என் பாதம்
தொடும் துளிகளை
பன்னீரெனப் பருகுகிறாய்
பாவமோ சாபமோ
எனையே சேரட்டும் அன்பே
பிரம்மித்து போகிறேன்
உன் மௌனத்திலும்
இத்தனை காதலா என்று
கண்மூடினால்
காட்சியாகிறாய் நீ
இருளில் நிலவாய்
மொத்த உலகமும்
அழகாய் தோனுது
சட்டென
உன் நினைவுகள் தீண்ட
நானுன்னை
நினைப்பது போல்
நீயுமென்னை நினைத்து
கொண்டிருப்பாய்
அல்லவா அன்பே
நீ உடன்
பயணிக்கும்
நொடிகளை போல்
வேறெதுவும்
எனை மகிழ்விக்காது
என்னவனே
உன்னைக்
காணாத பொழுதெல்லாம்
பார்வை இழக்கிறேன்
நான்
ஊருக்குத்தான் ஊரடங்கு
நம் உள்ளத்திற்கல்ல
என்று நான்
நினைத்தவுடன்
மனதுக்குள்
வந்து விடுகிறாய்
உலாவ அன்பே
அந்த நிலாவாக
முடியாத ஒன்றை
முயற்சித்து இருவரும்
தோற்று போகிறோம்
பிரிவிடம்
அரவணைக்கு
உன் மூச்சு
காற்றுக்குள்
அடைக்கலமானது
மனமும் இதமாக
எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
விழிகளுக்கும்
இசை தெரியும்
என்று தெரியாது
உன் விழிகளை
காணும் வரை
கண்முன்
வந்து நிழலாடும்
உன் பிம்பத்திடம்
தாவிக் கொ(ல்)ள்கிறது
மனமும்
நீ சென்ற பின்பும்
இன்னும்
சற்று நேரம்
துயில்கொள்
ரசித்து கொள்கிறேன்
உன்னை
எனை கொல்லுமுன்
உன் விழிகள்
எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே
உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே
மருதாணியும் ஏனடா
உன் கரம்
பட்டாலே சிவக்குமே
என் பாதமும்
உன் காதலால்
நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்
வெற்றிடம் என்பதே
கிடையாது
நீ வேரூன்றி
போனதால் உள்ளத்திலும்
உன் அடிமையாய்
நானும்
என் அரசனாய்
நீயும்
உனக்கான வேண்டுதலில்லை
நீயென்னுள் நலமாயிருப்பதால்
இது எனக்கான
வேண்டுதலே
நீயென்றும் நலமுடனிருக்க
வேண்டுமென்று
கொலுசொலியும்
இம்சைதான்
உன் நினைவிசையை
தூண்டிவிடும் போது
தட்டிவிட்ட போதும்
ஒட்டிவரும் மணலாய்
மனதை துரத்தும்
உன் நினைவில்
தடுமாறி போகிறேன்
நானும்
உன்னில் கிரங்கி
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகிறது
போர்க்களமின்றி
யுத்தம் செய்யும்
வித்தை
உன் விழிகளுக்கே
உண்டு
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
மனதில் மறைக்க
தெரிந்த எனக்கு
கண்களில்
மறைக்க தெரியவில்லை
உனை ரகசியமாய்
ரசிப்பதை
வான் திரைக்குள்
ஒளிந்து கொண்டாலும்
நிலவொளியின்
துணைக்கொண்டு
உனையடைவேன்
என்னவனே
கரை சேரும்
எண்ணமில்லை
நீந்துவது
உன் காதல்
கடலில் என்பதால்
மூழ்கினாலும்
அங்கே
நீ இங்கே
நான் நமக்கான
இடைவெளியில்
அழகாய்
பயணிக்கிறது
நம் காதல்
தடையின்றி
தொடரும்
உன் நிழலில்
அவ்வப்போது
இளைப்பாறுகிறேன்
நெடுந்தூர பயணத்தில்
கொந்தளிக்கு
உன் கோபத்தில் தான்
எத்தனை காதல்
அத்தனையும்
கொல்லுதே என்னை
ஒரு நொடியை
கடப்பதே
பல யுகமாயிருக்கும் போது
பல்லாயிர நொடிகளை
கடந்து விடு
என்கிறாய் நீயின்றி
ஆடி களைத்து
ஓய்ந்து கிடக்கும்
சிலம்பாய்
மனம்
உனை தேடி
களைத்து
ஓய்ந்து கிடக்கு
தீண்டலின் மென்மையா
இல்லை
உன் பார்வையின்
தாக்கமா
அசைவற்று போனது
என் கண்களும்
சாட்சிகள் ஏனடா
மன சாட்சியே
நீயான பின்
எதையும் விட்டுவைக்காமல்
அனைத்திலும்
கலந்து தொலைத்திருக்கிறாய்
நினைவாக பார்க்குமிடம்
எங்கும் உன் ஞாபகமே
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
நினைவு சின்னங்கள்
தேவையில்லை
உனை நினைக்க
நினைவே
நீயான பின்
மனமெங்கும்
உன் நினைவு
சுவையில்
ஆறிப்போனது
தேனீரும்
நீ தடுக்கும்
போதெல்லாம்
தவித்து போகுது
மனம்
இனி விலகலே
கூடாதென்று
நமக்கிடையில்
கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே
ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து
சுவாசத்தில்
பிரித்திட முடியாத
காற்றாய் நீ
கண்முன் நடமாடா
விட்டாலும்
நீ என்முன்
தானிருக்கின்றாய்
கண்ணோடு
கலந்த காட்சியாய்
அலைப்பேசி அமைதியான
போதும்
அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது
உன் வார்த்தைகள்
எனை இம்சித்து
நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்
மறந்திருந்தாலும்
மயக்குகிறாய்
மயிலிறகாய்
வருடி மனதை
வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு
பிழை என்றாலும்
ரசிப்பேன் உனை
நீயென் கவிதையல்லவா
என் நாழிகைகள்
எப்போதும் அழகுதான்
நம் அழகிய
நினைவுகளோடு
நகரும் போது
என் சுவாசம்
நிறுத்தப்பட்டாலும்
உன் சுவாசம்
எனை உயிர்ப்பிக்கும்
மரணமே கிடையாது
நீயிருக்கும் வரை
உன் மனம்
வாடிட கூடாதென்றே
பாதுகாக்கிறேன்
நம் காதல்
மலரை வாடாமல்
நீ என்றோ
அனுப்பிய குறுஞ்செய்தி
எனை இன்றும்
காத்திருக்க வைக்குது
நீ வருவாயென
விழியில் பேசாதே
என் வார்த்தைகளும்
வழி மாறி தவிக்குதே
நிசப்த்த வேளையில்
உன் நினைவின்
ஓசையாய் மெட்டியொலி
அன்பெனும் பிடிக்குள்
சிக்குண்ட கரங்கள்
விடுவிக்க நினைத்தாலும்
விடுபடாது
புதைந்து போகிறது
என் கோபங்களும்
உன் காதலின் ஆழத்தில்
வருடும் மயிலிறகில்
உன் கரத்தின் மென்மை
கிறங்குகிறேன்
காதலில் மெல்ல
அத்தனை சேட்டைகளையும்
செய்துவிட்டு
அமைதியாய் உறங்கும்
குழந்தையாய்
பல நேரங்களில் நீயும்
ரசிக்கிறேன் உனை நானும்
ஊடலிலும்
தேடலிலும்
ஊடுருவி
கொ(ல்)ள்கிறாய்
ஒருமுறை உனை காண
பலமுறை காதல் மனு
கொடுக்கிறேன் கடவுளிடம்
கருணை காட்டென்று
மனமெங்கும்
உன் நினைவுகள்
எனை தந்தியின்றியே
மீட்டி கொண்டிருக்கு
காதல் ஸ்வரங்களோடு
வீணையாய்
பற்றிக்கொண்டேன் கையை
கொடுத்தாய் நம்பிக்கையை
எதுவான போதும்
நொடியேனும் பிரியேனென்று
மறுவார்த்தை பேசாதே
என்றவன்
விழி வார்த்தையை
ரசித்தான்
நிறுத்தாதே என்று
கட்டுண்டு
கிடக்க பிடிக்கும்
உன் கரங்கள்
கயிறானால் காதலில்
துரத்தும் அலையாய்
நீ ஒதுங்கும்
கரையாய்
நான் காதலில்
கலந்தே கரைந்தே
மனதோடு மறைத்து
வைத்த காதல்
கிளையில் இலையாய்
படர்கிறது
கண்களுனை கண்டு
விட்டால் விழிகளில்
யாருக்கும் கிடைத்திடாத
அன்பாய் இரு
எனக்கு மட்டும்
சொந்தமானவ(ள)னாய்