தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal and Love SMS

Comments · 2334 Views

Here are the Latest Collections of Tamil Kadhal Kavithaigal 2022 - தமிழ் காதல் கவிதைகள் SMS, Tamil காதல் கவிதை Love SMS and Tamil Love Status for Social Stories and Reels.

காதல் கவிதை


தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..


காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...


உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...


கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...


கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...


பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்


இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)


இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...


உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...


ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட


குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...


பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட


நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...


துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்


மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...


விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...


மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட


மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...


விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!


என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!


இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே


விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட


உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே


எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்


காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்...


மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது...


ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...


ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்.....
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை


யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது


உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....


விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...


மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!


அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்


நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!


பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!


உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து


நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்


மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்


உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்


தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது


இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது


நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது


என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து


மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்


சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்


என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது


ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக


நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்...


வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்...


காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்


உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்


நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்


நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது


சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ...


விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...


நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்


நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்


சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!


உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க


தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்


தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்


ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா


நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்


உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே


தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக


பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்


எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை


மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்


ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க


என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது


உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து


எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே


உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக

Comments