Tamil Amma Kavithai - அம்மா கவிதை

Comments · 595 Views

Here are the Latest Collections of Tamil Amma Kavithai and Quotes.

அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள் ? - Amma Kavithai and Mother's day Quotes
Mother's day Quotes in Tamil - Let's Make the Unforgettable

அம்மா கவிதைகள்

அன்னையர் தினம் கவிதைகள் 2023

?????


காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்


ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை


இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை


வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக


அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது


வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை ❤


அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்


நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா


இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்


நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
(அம்மா)


எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே


உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை


கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்


ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
(அம்மா)


ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு


ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது


உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே


ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது


தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை


அம்மா ❤
இந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை


உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று


எங்க போறீங்க இதோ உங்களுக்காக

Comments