Whatsapp Love Status
?????
என் பிரிவு
உனக்கு இனிக்குமென்றால்
சென்றுவிடு எனக்கு
அது கசந்தாலும்
சரியே
என் மௌனங்களோடு
காத்திருக்கிறேன்
உன் வார்த்தை வரம்தரவேனும்
வா...!
உன் கண்களை
மட்டும் மூடிக்கொள்ளாதே
ஏனென்றால்
என் கவிதைக்கு
உன் காதல்
தெரியாமல் போய்விடுமல்லவா
கடிகார
நொடிமுள்ளாய்
உன்னுள் சுழலவைத்து
விட்டாய் அன்பில்
ஊடலில்
கடந்துபோன
நாட்களையும்
மீட்டெடு
நாழிகை போதவில்லை
காதலிக்க...!
அடிக்கடி
தொலைப்பதும்
உன்னை நொடிக்கொருமுறை
தேடுவதும் உன்னை
எந்த இழப்பையும்
தாங்கிக்கொள்வேன்
உன்னைதவிர
நிஜம்
நிழலாகும்போது
நினைவுகள்
நிரந்தரமாகின்றது
உன்னிடம் மட்டும்
என் கோபங்கள்
நீடிப்பதேயில்லை
மனம்
சாயும் போதெல்லாம்
தாங்கி கொள்கின்றாய்
நீ...!
வார்த்தைகளில்
வதைத்துவிட்டு
வரிகளில் சமாதானம்
செய்கிறாய்...!
விலகாமல்
நீயிரு விழியோடு
நானிருப்பேன்
எத்தனை
புகைப்படம் எடுத்தாலும்
என் விழிகளிலாடும்
உன் நிழல்படத்தைப்போல்
எதுவும் அழகில்லை
தடைகளில்லாத
போதும்
தடுப்புச்சுவர்
போடுது நாணம்
உனக்கு
என்னை பிடித்ததிலிருந்து
நானுமென்னை
அடிக்கடி ரசித்து
கொள்கின்றேன்
எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி
ஏமாற்றத்தை
பரிசளிக்கிறாய்
கொஞ்சம்
கலந்த பொய்யில்
உன் கொஞ்சல்
மொழியும் அழகு
கவிதையைபோல்
உன் மார்பில்
தஞ்சம் தேடுது
மனம் மரணிக்கும்போது
நீண்ட
இடைவெளிக்குபின்
நெடுந்தூரமொரு
பயணம்
முதல் சந்திப்பைபோல்
ஆசை
அலையிலோர்
முத்த குளியல்...!
உன் அன்பெனும்
நறுமணம் இருக்கும்
வரை நானும்
வாடாத மலரே
பொன்னுமில்லை
அதிக விலையுமில்லையென்றாலும்
கோடிகளை
தாண்டிய மதிப்பு
நீ அன்பாக
வாங்கி தந்ததால்
காலத்தின் மதிப்பு
தெரிந்தாலும்
உனக்காக கரையும்
நிமிடங்களை
தடுக்க முடியவில்லை
சிக்கலில்
மாட்டிக்கொண்டாலும்
மகிழ்ச்சியே
தீர்த்துவைப்பது
நீயென்பதால்
சேமித்து வைத்த
உன் நினைவுகளை
சிறுக சிறுக
செலவழிக்கின்றேன்
நீயில்லா பொழுதுகளில்
நிறமற்ற
உன் நிஜத்தில்
என் வாழ்வும்
வண்ணமானது
வெண்மதி ஒளியில்
உன் மதிக்காண
பௌர்ணமி
நிலவாய் காத்திருக்கேன்
புயலாய் மோதும்
உன் மூச்சுக்காற்றில்
சிக்கி திணறிப்போகிறேன்
நானும்...!
தென்றல்
தீண்ட சாயும்
நாணலாய்
உன் அன்பினீர்ப்பில்
சாய்கிறேன் நானும்...!
உனைக்காண
காத்திருக்கும் தருணம்
மனதும் இனிதாய்
மலரும்...!
வாழ்கின்றேன்
என்பதைவிட
உன்னால்
வாழ்கின்றேன்
என்பதே நிஜம்
முழுமதிக்காண
அனுமதியில்லை
நீயென் முகவரியாகுமுன்
மலரிலும்
மென்மையான
உன்னன்பில்
மீண்டும் மீண்டும்
நான் ஜனனிக்கின்றேன்
புதிதாய்...!
இதயம் கையளவு
நம் காதலதில்
கடலிலும் ஆழம்
இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம்
நீ...!
உன் சாயலிலொரு
முகம்
என் கண்முன்
நிறுத்திசெல்கிறது
உன்னை...!
அழிக்க துடிக்கும்
அலையைபோல்
மனதில் பதிந்த
(சு) வடுகளையும்
அழிக்கமுடியாமல்
தத்தளிக்கின்றேன்
அன்று
தரையில் நடைபயில
நம்பிக்கையெனும்
கரம் கொடுத்தார்
தந்தை...!
இன்று வாழ்க்கையெனும்
பாதையில் பயணிக்க
அன்புகரம் கொடுக்கின்றாய்
நீ...!
நானுன்
சொந்தமானபின்னும்
ஏனோ அடிக்கடி
திரைபோடுகிறது
நாணம்...!
என்
ஒவ்வொரு
செயலிலும்
நீயே கலந்திருக்கின்றாய்...!
மரக்கிளையில்
மறைந்திருந்த
மழை துளிகளையும்
தட்டியெழுப்புகிறான்
மழையில் நனைய
எனக்கு பிடிக்குமென்று...!
உனை
கண்டாலே
என் மனதிலும்
பலவண்ண
தோரணங்கள்...!
கொன்றுவிட
நினைக்கிறேன்
நினைவுகளை
அவை என்னையே
வென்றுவிடுகிறது
உன் இடம்
வெறுமையானதால்
நாழிகையும்
நகர்கிறது
மெதுவாய்
இரவும் அழகு
உன்னுடன் சேர்ந்து
நிலவை ரசிக்கும்போது...!
நானும்
ஒரு கூண்டுக்கிளியே
உன் அன்பெனும்
கூண்டில் அடைப்பட்ட
காற்றிலும்
வாசம் செய்கின்றாய்
சுவாசத்தில் கலந்து
எங்கும் நிறைந்தவனாய்
விட்டுவிடாதே
என் கரத்தை
குறைந்திடுமே
என் ஆயுள்
ரேகையும்
காதலில்
விழிமொழி
அழகென்றேன் அவனோ
இதுவும் காதல்தானென
கண்களில்
இதழ் பதித்து
சென்றான்...!
அனைத்துமிருந்தும்
எதுவுமில்லாத
மனநிலை
நீயில்லாததால்
அருகில்
பாதை
போகும் போக்கில்
பாதம் போனாலும்
என் விழிகள்
தொடர்வது
உன்னையே
வீழ்த்தும்
ஆயுதம்
விழிகளென
தெளிவாகவே
புரிந்துவைத்துள்ளான்
துன்பமும்
இன்பமாகும்
உன் கரம்
கண்ணீரை
துடைக்கும் போது
மூழ்கி போனேன்
உன்னில்
மீழுமெண்ணம்
இல்லை
இருவரி
கவிதையும்
பிடிக்கும்
அதுவுன்
விழிகளென்றால்
நொடியேனும்
இமைக்கவிடாது
துரத்திக்கொண்டிருக்கு
உன் நினைவுகளென்னை
கடிகார முட்களாய்
உன் கரமும்
மாலையாக
தொலைந்தேன்
நானும்
மெல்ல மெல்ல
விழிகளுக்குள் நீ
விழித்திருக்க
உறக்கமென்பதும்
எனக்கேது
ரகசியமாய்
மனதில் நுழைந்து
என்னை
உன் ரசிகையாக்கி
சென்றாய்
என் நலனே
உன் மகிழ்ச்சி
என்பதால்
இப்போதெல்லாம்
அதிகமாய்
வேண்டிக்கொள்கிறேன்
நமக்காக
மூழ்கினேனா
மூழ்கடிக்கபட்டேனா
எதுவென்றாலும்
மகிழ்வே
உன்(னில்)னால்
என்பதால்
மரத்தில்
படர்ந்த கொடியாய்
படர்ந்துவிட்டாய்
மனதில்
அன்பில்
நினைத்து...!
தீண்டும்
உன்னிதழால்
நாணம்
கொண்டு
சிவக்கின்றது
மருதாணியும்
தழுவும்
உன் சுவாச
காற்றில்
நானும் மறந்தேன்
ஸ்வரங்களை
மௌனமாய்
நீயிருக்க
மனதை கொல்லுது
உன் நினைவு
என்னுள்
நடமாடும்
உயிர்
புள்ளி நீ
எதற்காகவும்
காத்திருக்காத
கண்களின்று
காத்தருக்கு
உனக்காக
உனைக்காணும்
ஆவலில்...
உன்
அனல் பார்வையில்
தணலானது விழிகளும்
விடிந்தபின்னும்
மறையாத
நிலவாக
நீ நகர்ந்தபின்பும்
நிழலாக
உன் பிம்பம்
என்னுள் சுற்றுது
என்னுடன் பயணிக்கும்
நிழலாய் எப்போதும்
நீ வேண்டும்
என் கண்ணீருக்கு
ஆயிரம் காரணங்கள்
இருக்க
என் சிரிப்பிற்கு
நீ மட்டுமே காரணமாய்
இருக்கின்றாய்
எத்தனையோ நினைவுகளை
கடந்து சென்றும்
என்னில் நீ மட்டும்
நிலைத்தது ஏனோ
எங்க போறீங்க இதோ உங்களுக்காக