Love Quotes in Tamil Language - காதல் கவிதை

Comments · 590 Views

Here are the Latest Collections of Love Quotes in Tamil Language.

Love Quotes in Tamil 2022

Love Quotes in Tamil Language

???????


பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்


சில கணம்
மூழ்கினாலும்
உன்னன்பில்
பல யுகம்
வாழ்ந்த மகிழ்வு


நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்


கோர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து விட்டாய்
பார்வையில்


வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்


அன்பெனும்
மெல்லிய கயிற்றில்
கட்டிப்போட்டாய்
யாரும் அவிழ்த்திட
முடியாத முடிச்சாய்


தொடு திரையில்
வந்தாலும் தொடும்
தூரத்தில்
உனை பார்த்தது
போல் வெட்கத்தில்
தவிக்குது மனம்


மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்


எனக்காக
துடிக்க உன்னிதயம்
இருக்கென்ற
நினைப்பிலேயே
என்னிதயம்
சீராக துடித்து
கொண்டிருக்கு


முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லா விட்டாலும்
கற்பனையில்
இருக்கின்றாய்


சில நிமிடம்
ரசித்தாலும்
மனதை வண்ணமாக்கி
செல்லும் வானவில்லாய்
நீயும் வண்ணமாக்குகிறாய்
மனதை


ரசிப்பதற்கு
பல இருந்தும்
மலையை
சூழ்ந்து கொண்ட
மேகமாய்
அனைத்தையும்
மறைத்து விடுகிறாய்
நீ நினைவாகி
நானேவுன் ரசனையென்று


மல்லிகையும்
காத்திருக்கு
மன்னவனுன்
கரங்களினால்
குடியேற கூந்தலில்


உன் கிறக்கத்தில்
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகின்றது


சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்


இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே


உனக்காக
கரையும் நிமிடத்தில்
அழகாய் வளர்கின்றது
நம் காதல்


விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண


அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ


நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்


சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி


ஆள்கின்றாய்
அன்பில் வாழ்கின்றேன்
மன மகிழ்வாய்


ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்


இரு மனங்கள்
இணைந்தபின்
இடைவெளியும்
அழகுதான்
மௌனத்தில்
உரையாடும்
காதல் மொழியில்


காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்


உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே


எனக்கென்று
பயணங்கள் இல்லை
உன் தொடரலுக்காகவே
நடை போடுது
பாதங்கள் உனக்காக


மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்


தொலைவும்
ஒரு தொலைவில்லை
நீ யென்னை
தொலைக்காத
வரையில்


ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்


உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே


இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்


தட்டிக்கழிக்க நினைத்தாலும்
மனம் எட்டிப்பார்த்து
தொலையிது


கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்


தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்


என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்


சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது


எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ...!


எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது


இரை தேடும்
பறவையாய்
உனை தேடுது
இதயம்


என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்


நீ நான்
நம் பேரன்பு
சிறு உலகமென்றாலும்
நிறைவான அழகிய
வாழ்க்கை


எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்


இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை


அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)


என் கண்ணீரில்
புரியாத உணர்வா
உனக்கு என் கவிதைகளில்
புரிந்துவிட போகிறது


பயணம் முன்நோக்கி
தொடர்ந்தாலும்
மனம் பின்நோக்கியே
நகர்கிறது
நீ வருவாயென


காலங்கள் கடந்தாலும்
உனக்காக
என் மனக்கதவு
திறந்தே இருக்கும்
நீயும் எனக்காக
காத்திருக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்


உயிர்வரை சென்று
சுகமாய் எரிக்கும்
இவ் வெப்பம்
போதும்
பல நாட்கள்
நான் குளிர்
காய்ந்திட


காற்றாய் தீண்டும்
உன் நினைவில்
கரைகின்றது
என் நிமிடங்களும்
அழகாய்


பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே


பல நேரங்களில்
மையில் கரைக்கின்றேன்
சில நேரங்களில்
விழிகளில் விதைக்கின்றேன்
உன் மீதுள்ள
காதலை


விழியோடு
சேர்ந்த இமைப்போல்
இதய துடிப்போடு
கலந்திருப்பது நீ
என் சுவாசமாய்


சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர


எங்கோ மறைந்திருந்து
மாயங்கள் செய்கின்றாய்
குழம்பி தவிக்கின்றேன்
தெளிவற்ற நீரில்
பிம்பமாய்
எங்கே நீயென்று


அன்பில் நிரப்புகிறாய்
மனதை என்றும் வற்றாத
நிறைகுடமானது
நம் வாழ்க்கை


தடுத்த போதும்
நிறுத்த வில்லை
உனை எதிர்
பார்த்திருப்பதை
விழி


கரையை துரத்தும்
அலையாய் கடல்
தாண்டிய போதும்
துரத்துகிறது
உன் நினைவலைகள்
காற்றாய்


சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்


தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்


எண்ணத்தின்
ஓசை நீயாக
கண்களுக்குள்
வண்ண கனவாய்
நாமே


சிறு இடைவெளிக்கு
பின் சந்தித்தாலும்
ஏனோ
நம் முதல்
சந்திப்பை போலவே
நாணம் கலந்த
தவிப்பு


என் எல்லா
செயல்களிலும்
நீயே பிம்பமாகிறாய்
நீயின்றி நானில்லை


காற்றாய் வீசுகிறாய்
காதோடு பேசுகிறாய்
விழியலே
மொழி பகிர்ந்து
தென்றலாய் வருடியே


விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்


குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற


இருளான
இதய அறையிலும்
ஒளி பரவியது
நீ குடியேறியதால்


உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை


அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை


உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்


உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்


விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்


வலிகளை
நீ கொடுத்தாலும்
விழிகளில்
உனை சுமப்பேன்
சுகமாய்


வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது


சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி


உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே


மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென


பல நேரங்களில்
ஒளியாய்
சில நேரங்களில்
தூசியாய்
என் விழிகளில்
மாற்றத்தை
ஏற்படுத்துகிறாய்


உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்


தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட


பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது


நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்


பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்


கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்


கொல்லும் இருளில்
மெல்ல துளிர்விடுகிறது
உன் நினைவு
விடியலை நோக்கி


ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை


ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்


தொடர்பில்
உன் குரல்
ஓய்ந்ததும்
செயலற்ற
செல்போனாய் மனம்
மீண்டும்
உன் அழைப்பு
வரும் வரை


எனை ஆளும்
அன்பு நீயென்றால்
ஆயுள் முழுதும்
அடிமையே
நான் உனக்கு


யாருமற்று
வெறிச்சோடி கிடக்கும்
மொட்டை மாடியாய்
மனம் நீயில்லா
பொழுதுகளில்


வண்ணமாய்
மனதில் நுழைந்து
வான வில்லாயாய்
மறைந்து செல்கிறாய்
பார்வையிலிருந்து


தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்


அன்போ ஆறுதலோ
வார்த்தையால் வசீகரிப்பதைவிட
ஆதரவாய் வருடும்
உன் உள்ளங்கையின்
அழுத்தமே போதும்
என் ஆயுளுக்கும்


தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக

 

Comments