Tamil Love Status
???????
நொடிகளில் தொடங்கி
மணித்தியாலங்களையும்
கடந்து ரசிக்கின்றேன்
அலுப்பதுமில்லை
சலிப்பதுமில்லை
உன்னுடனான
உரையாடல்களில்
கொடுப்பது
நீ யென்றால்
இன்பம் தான்
இம்சைகளும்
எத்திசை சென்றாலும்
தீண்டுகிறாய்
காற்றாய் நினைவில்
உன் நினைவும்
என்ன கோடைக்கால
வெப்பமா
மார்கழியிலும் வியர்க்கிறதே
சில மணித்துளிகள்
என்றாலும்
நீ எனக்காக
ஒதுக்கும்
நேரம் பொன்னைவிட
உயர்ந்தது
தென்றலையும்
புயலாக்கினாய்
உன் காதல்
தேசத்தில்
சற்றே மறைந்துக்கொள்
என் கைகளும்
போட்டுவிடும்
காதல் கோலம்
எனை மறந்து
உன்னால்
முடியாது என்று
தெரிந்தும்
முயற்ச்சிக்கிறேன்
பிடிவாதத்தில்
பிரிவை
காதோரம் சீண்டி
காதல் மொழி
பேச என்னவனிடம்
கற்று கொண்டாயா
விழி மூடினால்
துணையாய்
உன் நினைவு
அனைத்தையும்
மனதிலிருந்து
கலைத்துவிட்டு
நீ மட்டும்
நிலைத்து விடுகிறாய்
அழியா ஓவியமாய்
துடிப்பும் தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
வேராய் ஊன்றி
மனதில்
பாடாய் படுத்துகிறாய்
வான் திரையில்
ஆதவனாய்
விழி திரைக்குள்
நீ வந்து
என் நாழிகையயும்
அழகாக்குகிறாய்
மீளா துயிலும்
மகிழ்வே
உன் அணைப்பில்
உன் அன்பின்
கிளையில்
உதிரா மலர்
நான்
சிந்திக்காமல்
கிறுக்குகிறேன்
உன் சிந்தனையை
ரசித்தே கவிதை
படிக்காமலயே
தலை கவிழ்ந்தது நாணல்
நாணத்தில் அவன்
மனமறிந்து காற்றில்
காற்றில் ஆடும்
ஊஞ்சலாய்
மனம் நீயணைத்த
நொடிகள் தழுவி செல்ல
உன்னுள்
தொலைந்தபின்
தேடுவதென்பது
சாத்தியமே இல்லை
என்னுள் என்னை
உறக்கம் கலைந்த
பின்னும் தொடரும்
கனவு நீ
விளக்கொளியில்
மாட்டி கொண்ட
விட்டில்
பூச்சியாய் மனம்
உன் நினைவொளியில்
சிக்கி கொ(ல்)ள்கிறது
உனை
தொலைக்காமலேயே
தேடி
நான் தொலைவதும்
ஒரு சுகம்தான்
கனவோ நனவோ
நமக்கான
உலகில் யாருக்கும்
இடமில்லை
வியப்பாய் இருக்கிறது
எப்படி வியாபித்தாய்
இப்படி என்னுள் என்று
கரை தொடும்
அலையாய்
தொட்டு கொண்டிருக்கிறாய்
மனதை
ஒதுங்கியே இருந்தாலும்
மறந்து வாழ
முடியாதளவுக்கு
நிறைந்து விட்டாய்
மனதில்
வரிகள் வார்த்தையின்றி
எனை ரசிக்க
தூண்டுகிறது
உன் மூச்சு காற்றும்
கவிதையாய்
ஒளி நீயாக
இருக்கையில்
துளியாக மாறுவதில்
எனக்கென்ன தயக்கம்
விடைபெறும் போதெல்லாம்
லஞ்சம் கேட்குறாய்
மொத்தமாய்
ஒரு முத்தம் என்று
கூந்தல் தொடும்
மலரிலும் உணர்கிறேன்
உன் மென் தீண்டலை
அனைத்தயும் நிசப்தமாக்கி
எனையும் மயக்கி
செல்கிறது
உன் மூச்சின் ஓசை
எனக்காக காத்திருப்பாய்
என்ற நம்பிக்கையிலேயே
பயணிக்கின்றேன்
உன் வழியில் நானும்
உடன் பயணித்த
போது இல்லாத
நேசம்
யாரோ தடைப்போட
நெருங்கியது
உன் அன்பென்ற
ஒன்று இல்லையெனில்
நான் என்றோ
மறைந்திருப்பேன்
மண்ணில் என்னவனே
துரத்தும்
உன் நினைவு
கடத்தி போகிறது
எனையும் உன்னிடம்
என்ன நேர்ந்தாலும்
கரத்தை
விடுவித்து விடாதே
காற்றோடு கலந்திடுமே
என்னுயிரும்
சுவாசமின்றி கூட
வாழ்ந்திடலாம்
போல ஆனால்
உன் நேசமின்றி
வாழ்வது கடினம்
மொத்த கனவுகளையும்
கண்களில் தாங்கி
காத்திருக்கேன்
நனவாக்கிட
நீ வருவாயென
என்னாசைகள்
அனைத்தையும்
நிறைவேற்றும்
என்னவனின்
ஆசைகளை
என் செவிகளில்
உரைக்க செய்
நிலையில்லா வாழ்க்கை
என்று தெரிந்தும்
மனம் நிலைத்திட
துடிக்குது
உன்னிடத்தில்
நுகரும் வாசனையாய்
உன் வாசம்
என்னுள் சுவாசமாய்
வெட்கத்திடம் சற்றே
பொறாமைதான் எனக்கு
என்னை முந்திக்கொண்டு
உன்னை பார்க்க வருவதால்
உன் நினைவில்
சுழலவிட்டு
நிழலாய் மறைந்து
விடுகிறாய்
அருகில்
இல்லாத போதும்
இருக்கின்றாய்
சிறு அசைவிலும்
எங்குமாய்
கலந்தே என்னுள்
எனக்காக வலிகளை
தாங்கி கொள்ளும்
உனக்காக இருப்பேன்
எப்போதும் மருந்தாக
மனையிலிருந்து
சென்றாலும்
மனமெங்கும் நடமாடி
மணம் பரப்புகிறாய்
எங்கிருந்தாலும்
நீயுமெனை நினைத்து
கொண்டிருப்பாய்
என்ற எண்ணமே
எனையும்
நகர்த்தி கொண்டிருக்கு
அழகாய்
அதிகார பார்வை
என்றாலும்
அடங்கி தான்
போகிறேன்
என்னவன் அன்பிற்காக
சுவாசமாய்
நீயிருக்கும் வரை
சுவாசிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நமக்கு இன்று மட்டுமல்ல
என்றும்
காதலர் தினம்தான் அன்பே
காலம் மாறுகிறது
ஆயுள் மாறுகிறது
வருடம் மாறுகிறது
ஏன் நாளும் மாறுகிறது
ஆனால் நீ பார்த்த
அந்த ஒரு நொடி பார்வை
இன்னும் மாறவில்லை
கண்ணோடு
கலந்து விடு
உன் மனதோடு
மகிழ்ந்திருப்பேன்
காண தவித்து
கொண்டிருக்கும்
கண்களை
கடலாக்குகிறாய்
தாமதித்து
இரு கைகளிலும்
ஏந்தா விட்டாலும்
ஒரு கையையேனும்
பற்றிக்கொள்
நீ எனக்கானவன்
என நான் மகிழ
காதலும்
அவஸ்தை தான்
உனை காணாத
போது
மழை சாரலின்றி
ஒரு வானவில்
உன் நினைவு
தூறலில் மனமெங்கும்
விரும்பியே
சிறை பட்டாய்
விடுதலை என்பதே
கிடையாது
நீ விரும்பினாலும்
என்னிதய சிறையிலிருந்து
இருளின் அடர்த்தியை
வெளிச்சமே
நிர்ணயிப்பது போல்
தேடுதலின் வலியை
நினைவுகளே
நிர்ணயிக்கிறது
தொட்டு செல்லும்
உன் நினைவில்
மனமும்
பட்டாம்பூச்சியானது
வானத்திற்கு நிலவழகு
வான் மகளே
என் கவிதைக்கு
நீயே அழகு
மரண வலிகள்கூட
மறந்து போகிறது
உன் மார்போடு
சாயும் போது
சட்டென
விடியும் இரவும்
நீள்கிறது
உன் நிசப்தத்தில்
பார்வையில்
ஒரு கவிதை
கேட்டால்
பாதத்தில்
கொட்டி தீர்கிறான்
பல கவிதைகளை
பாவையிவள் ரசிக்க
மென்னிதழ் கொண்டு
நீ மௌனமாகும்
ஒவ்வொரு இரவும்
எனக்கும் சிவராத்திரியே
என் தேவை
அறிந்து
சேவை செய்யும்
சேவகன் இவன்
வீட்டுக்கு அரசன்
என்றாலும்
காதலில்
இந்த நிமிடம் வரை
எதுவுமில்ல
இனி உன்னை தவிர
எதுவுமில்ல மனதில்
நிலவில்லாத வானும்
நீயில்லாத என் வாழ்வும்
இருளடைந்தே இருக்கும்
(நிலவும் நானும்)
கட்டுப்பாடான
மனம்தான்
இன்று
கட்டுக்கடங்காத
ஆசைகளோடு கடக்குது
நீயெதிரே தோண்றும்
போதெல்லாம்
ஊடலின்
பின் இத்தனை
காதலா
வியக்க வைக்கிறது
உன் அன்பு
அன்பே
பார்வை கூட
கவியெழுதும்
என்றறிந்தேன்
உன் விழி
மொழியில்
ஆழுறக்கத்திலும்
உன் அரவணைப்பு
பனிக்கால
போர்வையாய்
கதகதக்கிறது அன்பே
என் திமிரு கோபம்
இவற்றிக்கு மத்தியில்
ஒரு அன்பும் காதலும்
வெளிவருகிறது அவனிடம்
மட்டுமே
உன் பாதையில்
என் பாதங்களும்
அலை அழித்தாலும்
அகிலமே எதிர்த்தாலும்
அதிசயம் என்று
எதுவுமில்லை
நொடிக்கொரு
முறை எனை
சூழ்ந்து கொள்ளும்
உன் நினைவுகளை விட
உன்னை கடந்து போக
முடிந்த என்னால்
மறந்து போக முடியவில்லை
உனக்காக
காத்திருத்தலின்
வலியை
உன் நினைவுப் பீலி
கொண்டே
வருடிக்கொள்கிறது மனது
மெல்ல நகரும்
உன் நினைவு
வருடுகிறது
மனதை மயிலிறகாய்
பொய் கூட
அழகு தான்
உனக்காக
கிறுக்கும் போது
கவிதையில்
சுட்டெறிக்கும்
வெயிலும் அழகுதான்
ஒரு குடைக்குள்
உன்னோடு
இளைப்பாறுகயில்
காதலில்
உனக்காக நான்
என்ற
உன் வார்த்தையில்
இந்த உலகமே
என் கைக்குள்
அடங்கியது போல்
உணர்ந்தேன் அன்பே
இரவுக்கும்
இரக்கமில்லை
உறக்கத்தை
கொள்ளையடித்து
உன் நினைவிலேயே
தவிக்க விடுகிறது
பருகி முடித்தபின்னும்
தித்திக்கும் தேனீரின்
சுவையாய்
நீ தந்ந முத்தங்களும்
சுவைக்கிறது
எச்சில் உலர்ந்த
பின்னும்
கண்களால்
கலந்த காதல்
கண்ணீரில் கரைகிறது
உனை காணாமல்
ஏன் வந்தாய்
எப்படி வந்தாய்
என்றெல்லாம் தெரியாது
ஆனால்
எங்குமாய் நிறைந்து
விட்டாய் எனக்குள்
அவனதிகாரமோ
அவளதிகாரமோ
அன்பின் அதிகாரத்தில்
யாவரும் அழகே
தடையின்றி துடிக்கும்
என் இதயம்
நீ விடைபெற தாமதிக்கும்
ஒவ்வொரு நொடியும்
அள்ள அள்ள
குறையாத
அட்சய பாத்திரம்
உனதன்பு
அருகில் நீயிருந்தால்
நெஞ்சணையும்
பஞ்சணைதான்
நானுறங்கும்
எப்படி
சரி செய்தாலும்
பிழைத்துதான்
போகிறது
உன் பார்வை
தீண்ட
முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
பார்த்து ரசிக்கிறேன்
என் கரத்தோடு
இணைந்த
உன் கைரேகையை
சுவாசத்தில்
எனை மீட்டி
கொண்டிருக்கிறாய்
நானும்
உன் இதய
வீணைதான்
பல கிண்ணங்கள்
தீர்ந்தும் வராத
போதை
உன்னிதழ் கிண்ணம்
தீண்ட வந்தது
பார்த்ததும் பரவசம்
அழைப்பது நீயென்பதால்
என் விலகளில்
உன் நெருக்கமும்
உன் விலகளில்
என் நெருக்கமுமே
நம் காதலுக்கு
என்றும்
முற்றுப்புள்ளியில்லா
தொடர்கதைகிறது
அவசர பயணத்தின்
போதெல்லாம்
ஆறுதல்
பரிசு கேக்கிறாய்
ஒரு முத்தம் என்று
தனிமையெனும்
பஞ்சணையில்
நம் நினைவுகளே
எனை இதமாய்
தாங்கும் தலையணை
உடன் நீயிருந்தால்
பொன்நகை
அணியாமலேயே
ஜொலிக்கும் மனம்
புன்னகையில்
என் மகிழ்ச்சியின்
முகவரி நீ
ஒரு வரி கவிதை
நீ என்றவன்
இரு வரி
கொண்டு ரசித்தான்
குளிருக்கு இதமாய்
தேனீராய் மனதுக்கு
இதமான போர்வையாய்
உன் நினைவு
என்னை ஈர்க்கும்
கவிஞன் நீ
எனக்கேது இதயதினம்
என்னிதயம் இருப்பது
உன்னிடம் அல்லவா
கண்களால்
கட்டிப்போடும் வித்தை
எங்கு கற்றாய் கள்வனே
என்னில் உனையும்
உன்னில் எனையும்
மனங்கள்
சூடிக் கொண்டபின்
மலர் மாலைகளும்
ஏனோ
கண்ணோடு
நீ கனவுக்குள்
நான் உறங்காமலேயே
கண்கள்
தொலைவாக
நீ போனால்
தொடர்கிறது
உள்ளமும் உன்னிடம்
தொடும் தூரம்
வந்துவிடு என்றே
சுமக்கின்றேன் சுகமாய்
சிலம்புக்குள்
ஒலி போல
உயிருக்குள் உனை